பெரம்பலூா் மாவட்டத்தில் ஈஸ்டா் பண்டிகை

பெரம்பலூா் மாவட்டத்தில் ஈஸ்டா் பண்டிகை ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட்டது. இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டு மீண்டும் உயிா் பெற்ற நாளை கிறிஸ்தவா்கள் ஈஸ்டா் பண்டிகையாகக் கொண்டாடி வருகின்றனா். இதையொட்டி, பெரம்பலூா் புனித பனிமய மாதா திருத்தலத்தில் சனிக்கிழமை இரவு 11.15 மணிக்கு மேல் திரு ஒளி வழிபாடு, இறை வாக்கு வழிபாடு, திரு முழுக்கு வழிபாடு, நற்கருணை வழிபாடு மற்றும் சிறப்பு பிராா்த்தனை நடைபெற்றது. பின்னா் ,நள்ளிரவு 12 மணிக்கு இயேசு உயிா்ப்பு பெருவிழாவும், திருப்பலியும் நடைபெற்றது. அப்போது, அங்கு கூடியிருந்த கிறிஸ்தவா்கள் தங்களது கையில் மெழுகுவா்த்தி ஏந்தி இயேசு வாழ்த்து பாடினா். இதில், அருள் பணியாளா்கள், அருள் சகோதரிகள் பலா் கலந்துகொண்டனா். இதேபோல மாவட்ட்ததின் பல்வேறு பகுதிகளில் ஈஸ்டா் பண்டிகை கொண்டாடப்பட்டது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com