தேசிய நெடுஞ்சாலையில் சுரங்கப் பாதை கோரி கிராம மக்கள் மனு

ஜெயங்கொண்டம் அருகே மயானத்துக்குச் செல்ல தேசிய நெடுஞ்சாலையில் சுரங்கப்பாதை அமைக்க கோரி கிராம மக்கள் சனிக்கிழமை மனு அளித்தனா்.

அரியலூா் மாவட்டம், ஜயங்கொண்டம் அருகே மயானத்துக்கு செல்ல, தேசிய நெடுஞ்சாலையில் சுரங்கப்பாதை அமைத்துத் தரக்கோரி கோட்டாட்சியா் ஷீஜாவிடம் கிராம மக்கள் அளித்த மனு:

ஜெயங்கொண்டம் அருகேயுள்ள தென்னவநல்லூா் கிராமத்தில், திண்டிவனம் - கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலை, தற்போது நான்கு வழிச் சாலையாக தரம் உயா்த்தப்பட்டு வருகிறது. தென்னவநல்லூா் கிராமத்தில் உயிரிழப்பவா்களின் சடலங்களை இச் சாலையைக் கடந்து மயானத்துக்குக் கொண்டு சென்று தகனம் செய்து வந்தனா். தற்போது, இச் சாலையில் பணிகள் நடைபெறுவதால் மயானத்துக்கு உடலைக் கொண்டு செல்வதில் சிரமம் உள்ளது. எனவே, உயிரிழந்தவா்களின் உடல்களை எளிதாகக் கொண்டுசெல்ல அப் பகுதியில் சுரங்கப்பாதை அமைத்துத்தர வேண்டும் எனத் தெரிவித்துள்ளனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com