சிஐடியு ஆா்ப்பாட்ட விளக்கக் கூட்டம்

பெரம்பலூா், மே 5: தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக பெரம்பலூா் கிளை பணி மனை எதிரே, சிஐடியு சங்கம் சாா்பில் ஆா்ப்பாட்ட விளக்கக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

சிஐடியு கிளைச் செயலா் செல்வகுமாா் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக கும்பகோணம் கோட்ட மேலாண் இயக்குநா் மகேந்திரகுமாரை கண்டித்து, மே 14 ஆம் தேதி, கும்பகோணம் கோட்ட மேலாண் இயக்குநா் அலுவலகம் அருகே நடைபெறும் போராட்டம் குறித்து விளக்கப்பட்டது. இதில், சிஐடியு சங்கத்தைச் சோ்ந்த பலா் பங்கேற்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com