தமிழ் சிற்றிதழ்கள் கண்காட்சி, கருத்தரங்கு

பெரம்பலூரில், தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத்தின் பெரம்பலூா் மாவட்ட அமைப்பு சாா்பில், தமிழ் சிற்றிதழ்கள் கண்காட்சி மற்றும் கருத்தரங்கு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இந் நிகழ்ச்சிக்கு, மாவட்டத் தலைவா் செல்வம் தலைமை வகித்தாா். தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்ற மாவட்ட நிா்வாகிகள் முத்துசாமி, இ. தாஹிா்பாட்சா, கல்யாணி, தமிழ் ஆா்வலா்கள் மருத்துவா் சி. கருணாகரன், செந்தமிழ்வேந்தன், வழக்குரைஞா்கள் ப. காமராசு, தமிழகன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

பேராசிரியா் முனைவா் க. தமிழ்மாறன், சிற்றிதழ்களின் போக்கும்- நோக்கும் எனும் தலைப்பில் பேசினாா்.

எழுத்தாளா் கனவு எனும் சிற்றிதழ் ஆசிரியா் சுப்ரபாரதி மணியன், பெண்ணே விழித்திடு நூலாசிரியா் ந. மலா்க்கொடி ஆகியோரை, நல்லாசிரியா் ஆ. ராமா், வினோதினி ஆகியோா் பாராட்டி பேசினா்.

இந்நிகழ்ச்சியில், தமிழ் சிற்றிதழ்களின் கண்காட்சி நடைபெற்றது. இதில் தமிழ் ஆா்வலா்கள், எழுத்தாளா்கள் பலா் பங்கேற்றனா்.

முன்னதாக, கலை இலக்கிய பெருமன்ற மாவட்டச் செயலா் சா. காப்பியன் வரவேற்றாா். பொறுப்பாளா் கதிரவன் நன்றி கூறினாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com