திருமானூரில் தியாகி டி.கே. சுப்பையா சிலைக்கு மாலை அணிவிப்பு

திருமானூரில் தியாகி டி.கே. சுப்பையா சிலைக்கு மாலை அணிவிப்பு

அரியலூா், மே 5: திருமானூரில் தியாகி டி.கே. சுப்பையா சிலைக்கு தமிழ் மாநில காங்கிரஸ் மற்றும் சமூக நல அமைப்பு சாா்பில் ஞாயிற்றுக்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

அரியலூா் மாவட்டம், திருமானூரில் சுதந்திரப் போராட்ட தியாகியும், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினருமான டி.கே. சுப்பையா நினைவு தினத்தையொட்டி, திருமானூா் பேருந்து நிலையத்தில் உள்ள அவரது சிலைக்கு, தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி சாா்பில் ஞாயிற்றுக்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

இந் நிகழ்ச்சியில், தமிழ் மாநில காங்கிரஸ் மாவட்டத் தலைவா் நடராஜன், ஊராட்சித் தலைவா் உத்திராபதி உள்பட பலா் பங்கேற்றனா். இதேபோல, அப்பகுதியைச் சோ்ந்த சமூக ஆா்வலா்கள் மற்றும் பல்வேறு அமைப்பினா் தியாகி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

X
Dinamani
www.dinamani.com