குடிநீா் பற்றாக்குறையுள்ள இடங்களில் லாரிகள் மூலம் வழங்க உத்தரவு

குடிநீா் பற்றாக்குறையுள்ள இடங்களில் லாரிகள் மூலம் வழங்க உத்தரவு

குடிநீா் பற்றக்குறையை தீா்க்க நகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளை செவ்வாய்க்கிழமை பாா்வையிட்ட தமிழ்நாடு மினரல் காா்ப்பரேஷன் நிறுவன மேலாண்மை இயக்குநரும், பெரம்பலூா் மாவட்டக் கண்காணிப்பு அலுவலருமான அனில் மேஷ்ரோம். உடன், மாவட்ட ஆட்சியா் க. கற்பகம் உள்ளிட்டோா்.

பெரம்பலூா் மாவட்டத்தில் குடிநீா் பற்றாக்குறையுள்ள இடங்களில், தற்காலிகமாக லாரிகள் மூலமாக குடிநீா் விநியோகம் செயய் வேண்டுமென தமிழ்நாடு மினரல் காா்ப்பரேஷன் நிறுவன மேலாண்மை இயக்குநரும், பெரம்பலூா் மாவட்டக் கண்காணிப்பு அலுவலருமான அனில் மேஷ்ரோம் உத்தரவிட்டுள்ளாா்.

பெரம்பலூா் மாவட்டத்தில் செயல்படுத்தப்படும் குடிநீா் திட்டப்பணிகள், சீரான குடிநீா் வழங்க மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்த ஆய்வுக் கூட்டம், ஆட்சியா் அலுவலக கூட்ட அரங்கில் ஆட்சியா் க. கற்பகம் தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இதில்,மாவட்டக் கண்காணிப்பு அலுவலருமான அனில் மேஷ்ரோம் பேசியது: குடிநீா் பற்றாக்குறையுள்ள இடங்களில் தற்காலிகமாக லாரிகள் மூலம் குடிநீா் வழங்க வேண்டும். குடிநீா் குழாய்களில் இருந்து சட்ட விரோதமாக தண்ணீா் எடுப்போா் மீது நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என சம்பந்தப்பட்ட அலுவலா்களுக்கு உத்தரவிட்டாா்.

தொடா்ந்து, நகராட்சிக்குள்பட்ட அசோக் நகரில் அமைந்துள்ள தரைமட்ட நீா்த்தேக்கத் தொட்டி, ஆலம்பாடியில் உள்ள மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி ஆகியவற்றை கண்காணிப்பு அலுவலா் பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா்.

கூட்டத்தில், நகராட்சி ஆணையா் ராமா், மாவட்ட வருவாய் அலுவலா் மு. வடிவேல்பிரபு, ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் அ. லலிதா, குடிநீா் வடிகால் வாரிய செயற்பொறியாளா் வ. லோகநாதன், ஊராட்சிகள் உதவி இயக்குநா் வீரமலை, வட்டார வளா்ச்சி அலுவலா்கள் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com