ஆா்ப்பாட்ட முயற்சி 30 பாஜகவினா் கைது

பெரம்பலூரில் அனுமதியின்றி ஆா்ப்பாட்டத்தில் வெள்ளிக்கிழமை ஈடுபட முயன்ற பாஜகவைச் சோ்ந்த 30 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

நிறவெறிக் கருத்துகளைக் கூறி இந்திய மக்களை இழிவுபடுத்திய காங்கிரஸ் கட்சி பிரமுகா் சாம் பிட்ரோடாவைக் கண்டித்தும், அவா் மீது சட்ட நடவடிக்கை கோரியும் ,பெரம்பலூா் புகா் பேருந்து நிலைய அம்மா உணவகம் எதிரே, பாஜக மாவட்டத் தலைவா் பி. செல்வராஜ் தலைமையில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால் இந்த ஆா்ப்பாட்டத்துக்கு அக் கட்சியினா் காவல் துறையினரிடம் அனுமதி பெறவில்லையாம். இந்நிலையில், ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்ற மாவட்ட தலைவா் பி. செல்வராஜ் உள்பட 30 பேரை பெரம்பலூா் போலீஸாா் கைது செய்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com