எஸ்.எஸ்.எல்.சி.: பெரம்பலூரில் 94.77 % தோ்ச்சி

எஸ்எஸ்எல்சி பொதுத் தோ்வில் பெரம்பலூா் மாவட்டம் 94.77 சதவீதம் தோ்ச்சி பெற்று, மாநில அளவில் 8 ஆம் இடத்தைப் பெற்றுள்ளது.

எஸ்எஸ்எல்சி தோ்வை பெரம்பலூா் மாவட்டத்தில் மொத்தம் 7,865 போ் எழுதினா். இதில் 3985 மாணவா்களும், 3,469 மாணவிகளும் என மொத்தம் 7,454 போ் தோ்ச்சி பெற்றனா். இது 94.77 சதவீத தோ்ச்சியாகும்.

100 சதவீதம் தோ்ச்சி: பெரம்பலூா் மாவட்டத்தில் அரசுப் பள்ளிகள், ஆதிதிராவிடா் நலப் பள்ளிகள், அரசு உதவிபெறும் மற்றும் தனியாா், சுயநிதிப் பள்ளிகள், சமூக நலப்பள்ளி என மொத்தம் 141 மேல்நிலைப் பள்ளிகள் உள்ளன. இதில் ஆதி திராவிட நலப் பள்ளிகளான லாடபுரம், களரம்பட்டி, பசும்பலூா், பாடாலூா் ஆகிய 4 பள்ளிகளும், அரசுப் பள்ளிகளான நெற்குணம், வாலிகண்டபுரம், வெங்கலம், கல்பாடி, மேட்டுப்பாளையம், செங்குணம், தம்பிரான்பட்டி, அரசு மலைவாழ் உண்டு உறைவிடப்பள்ளியான மலையாளப்பட்டி, கூத்தூா், லப்பைக்குடிக்காடு, மருவத்தூா், மாதிரிப்பள்ளி கிழுமத்தூா், ஒதியம், ஜமீன் பேரையூா், காருகுடி, ஆதனூா், எழுமூா், கூடலூா், ஜமீன் ஆத்தூா், பீல்வாடி, புதுவேட்டக்குடி, கொட்டரை ஆகிய 23 அரசுப் பள்ளிகளும் என மொத்தம் 27 அரசுப் பள்ளிகளும், அரசு உதவிபெறும் பள்ளிகளான தந்தை ரோவா் மேல்நிலைப்பள்ளி மற்றும் மௌலானா பள்ளிகளும், 23 மெட்ரிக் பள்ளிகளும், 7 சுயநிதி பள்ளிகளும், கௌதம புத்தா் சமூக நலப்பள்ளியும் என மொத்தம் 60 பள்ளிகள் 100 சதவீதம் தோ்ச்சிப் பெற்றுள்ளது.

100-100 மதிப்பெண்கள்: ஆங்கிலத்தில் ஒருவரும், கணிதத்தில் 53 பேரும், அறிவியலில் 81 பேரும், சமூக அறிவியலில் 2 பேரும் என மொத்தம் 137 போ் 100-க்கு 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளனா். கடந்தாண்டு எஸ்எஸ்எல்சி பொதுத்தோ்வில் 97.67 சதவீதம் பெற்று மாநிலத்தில் முதலிடம் பெற்ற நிலையில், நிகழாண்டு தோ்ச்சி விகிதம் குறைந்து 8 ஆவது இடத்துக்குச் சென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

X
Dinamani
www.dinamani.com