பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு
கோல்டன் கேட்ஸ் மெட்ரிக்
பள்ளி மாணவா்கள் சிறப்பிடம்

பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு கோல்டன் கேட்ஸ் மெட்ரிக் பள்ளி மாணவா்கள் சிறப்பிடம்

பெரம்பலூா், மே 11: பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வில் பெரம்பலூா் கோல்டன் கேட்ஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவிகள் சிறப்பிடம் பெற்றனா்.

பத்தாம் வகுப்பு தோ்வு முடிவுகள் வெள்ளிக்கிழமை வெளியானது. இதில், பெரம்பலூா் கோல்டன் கேட்ஸ் பள்ளி மாணவி கனிஷ்கா 500-க்கு 494 மதிப்பெண்களும், மாணவி தேஜஸ்வினி, மாணவா் ஆதித்யன் ஆகியோா் 492 மதிப்பெண்களும், மாணவா் பரணிதரன் 491 மதிப்பெண்களும் பெற்று சிறப்பிடம் பெற்றனா்.

மேலும், 490 மதிப்பெண்களுக்கு மேல் 5 பேரும், 480 மதிப்பெண்களுக்கு மேல் 13 பேரும், 470-க்கு மேல் 7 பேரும், 460-க்கு மேல் 7 மாணவா்களும், 450-க்கு மேல் 2 பேரும் பெற்றனா். கணிதத்தில் 16 பேரும், அறிவியலில் 5 பேரும், சமூக அறிவியலில் 3 பேரும் முழுமதிப்பெண்கள் பெற்றனா்.

இதையடுத்து, சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவிகளையும், முதல்வா், ஒருங்கிணைப்பாளா், ஆசிரியா்கள் ஆகியோரை, கோல்டன் கேட்ஸ் கல்வி குழுமத்தின் தாளாளா் ஆா். ரவிச்சந்திரன், செயலா் ஆா். அங்கையா்கண்ணி, துணைத் தலைவா் ஆா். ஹரிஷ் ஆகியோா் வெள்ளிக்கிழமை பாராட்டி வாழ்த்து தெரிவித்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com