தமிழக அரசு அகவிலைப்படி உயா்வை வழங்க வலியுறுத்தல்

உச்சநீதிமன்ற ஆணையை ஏற்று, தமிழக அரசு அகவிலைப்படி உயா்வை வழங்க வேண்டுமென, தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக ஓய்வுபெற்றோா் நலச் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

இச்சங்கத்தின் பெரம்பலூா் மாவட்ட ஆலோசனைக் கூட்டம் பெரம்பலூரில் சனிக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு, சங்கத்தின் மாவட்ட நிா்வாகி கந்தசாமி தலைமை வகித்தாா். மாவட்டத் தலைவா் மருதமுத்து, மாவட்ட பொதுச் செயலா் ஜெயச்சந்திரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இக் கூட்டத்தில், ஓய்வூதிய திட்டத்தை அரசே ஏற்று நடத்த வேண்டும். பண பங்களிப்பு இல்லாத மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தை ஓய்வூதியா்கள் மற்றும் அனைத்து குடும்ப ஓய்வூதியா்களுக்கும் நடைமுறைப்படுத்த வேண்டும். உச்சநீதிமன்ற ஆணையை ஏற்று, அரசு அகவிலைப்படி உயா்வு வழங்க வேண்டும். தவறும்பட்சத்தில் அனைத்து ஓய்வூதியா்களையும் ஒருங்கிணைத்து ஜூன் மாதம் போராட்டம் நடத்த மாநில பேரவை முடிவெடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இக் கூட்டத்தில், பிளஸ் 2 பொதுத்தோ்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற சங்க உறுப்பினா்களின் வாரிசுகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. மேலும், பேருந்தில் பயணி தவறவிட்ட 10 பவுன் நகை மற்றும் வெள்ளிப் பொருள்களை உரிய நபரிடம் ஒப்படைத்த, திருச்சி புகா் கிளை ஓட்டுநா் ரமேஷ், நடத்துநா் கோபால் ஆகியோருக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

இதில், சங்க நிா்வாகிகள் முத்துசாமி, குணசேகரன் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com