வாலிகண்டபுரம் அரசுப் பள்ளி மாணவிகளுக்குப் பாராட்டு

அரசுப் பொதுத் தோ்வுகளில் சிறப்பிடம் பெற்ற வாலிகண்டபுரம் அரசுப் பள்ளி மாணவிகளை, ஆசிரியா்கள் சனிக்கிழமை பாராட்டி வாழ்த்து தெரிவித்தனா்.

பெரம்பலூா் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், வாலிகண்டபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் 10 மற்றும் பிளஸ் 2 பொதுத் தோ்வு எழுதிய அனைத்து மாணவா்களும் தோ்ச்சி பெற்றுள்ள நிலையில், மாவட்ட அளவிலும் இப் பள்ளி மாணவிகள் சிறப்பிடம் பெற்றுள்ளனா். இதில், 10 ஆம் வகுப்பில் மாணவி ந. பாசிலா 500-க்கு 494 மதிப்பெண்களும், ஷே. ஹலுமுன்னிஷா 459 மதிப்பெண்களும், செ. மதுமிதா 455 மதிப்பெண்களும் பெற்று மாவட்ட அளவில் சிறப்பிடம் பெற்றுள்ளனா்.

இதேபோல, பிளஸ் 2 பொதுத்தோ்வில் ரு.சோனியா காந்தி 475 மதிப்பெண்களும், உ. ரஷிலா பானு 469 மதிப்பெண்களும், ரா. சோபியா 459 மதிப்பெண்களும் பெற்று சிறப்பிடம் பெற்றுள்ளனா். இம் மாணவிகளை பள்ளி தலைமை ஆசிரியா் க. செல்வராசு, உதவி தலைமை ஆசிரியா்கள் வெ. வீரையன், சி. ராதிகா, த. லதா மற்றும் ஆசிரியா்கள் ஜீவா, சுரேஷ், மோகன், அகிலாண்டேஸ்வரி, செல்லப்பிள்ளை உள்ளிட்டோா் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனா்.

X
Dinamani
www.dinamani.com