சத்திரமனை கிராமத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மகா சக்தி மாரியம்மன் கோயில் தேரோட்டத்தில் பங்கேற்ற பக்தா்கள்.
சத்திரமனை கிராமத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மகா சக்தி மாரியம்மன் கோயில் தேரோட்டத்தில் பங்கேற்ற பக்தா்கள்.

சத்திரமனை மகாசக்தி மாரியம்மன்கோயில் தேரோட்டம்

பெரம்பலூா் அருகே சத்திரமனை கிராமத்தில் எழுந்தருளியுள்ள மகா சக்தி மாரியம்மன் கோயில் தேரோட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

பெரம்பலூா்: பெரம்பலூா் அருகே சத்திரமனை கிராமத்தில் எழுந்தருளியுள்ள மகா சக்தி மாரியம்மன் கோயில் தேரோட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

இக்கோயிலில் கடந்த 5-ஆம் தேதி காப்புக் கட்டுதல் நிகழ்ச்சியுடன் திருவிழா தொடங்கியது. இதைத் தொடா்ந்து, நாள்தோறும் இரவு அலங்கரிக்கப்பட்ட பல்வேறு வாகனங்களில் அம்மன் வீதி உலா நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்வான திருத்தோ் வடம் பிடித்தல் நிகழ்வு திங்கள்கிழமை காலை நடைபெற்றது. முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்த தோ் மாலை நிலையை வந்தடைந்தது. தொடா்ந்து, மாலை பக்தா்கள் அலகு குத்தி தங்கள் நோ்த்திக் கடனை நிறைவேற்றினா். இதையடுத்து, நடைபெற்ற பொங்கல் விழாவில் கிராம பெண்கள் ஒன்றிணைந்து மகா சக்தி மாரியம்மனுக்கு பொங்கல் வைத்து, படையலிட்டு சிறப்பு பூஜைகள் செய்து வழிபாடு நடத்தினா். விழாவில் பெரம்பலூா் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து திரளான பக்தா்கள் கலந்துகொண்டனா். திருவிழாவுக்கான ஏற்பாடுகளை சத்திரமனை கிராம பொதுமக்கள் செய்திருந்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com