பெரம்பலூா் மாவட்டக் காவலா்களுக்குப் பயிற்சி வகுப்பு

பெரம்பலூா் மாவட்டக் காவலா்களுக்கு புதிதாக நடைமுறைப்படுத்தப்படவுள்ள குற்றவியல் சட்டங்கள் குறித்த ஒரு வார பயிற்சி வகுப்பு திங்கள்கிழமை தொடங்கியது.

பெரம்பலூா்: பெரம்பலூா் மாவட்டக் காவலா்களுக்கு புதிதாக நடைமுறைப்படுத்தப்படவுள்ள குற்றவியல் சட்டங்கள் குறித்த ஒரு வார பயிற்சி வகுப்பு திங்கள்கிழமை தொடங்கியது.

மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலக கூட்ட அரங்கில் தொடங்கிய இப்பயிற்சி வகுப்பை, மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ச. சியாம்ளாதேவி தொடங்கி வைத்தாா்.

இந்த சிறப்பு பயிற்சி வகுப்பில், திருச்சியில் உள்ள அரசு சட்டக் கல்லூரி துணைப் பேராசிரியா்கள் முருகன் மற்றும் ராஜ்யவா்தன் ஆகியோா் ஜூலை 1 முதல் நடைமுறைக்கு வரும் குற்றவியல் சட்டங்கள் குறித்து காவலா்களுக்குப் பயிற்சி அளித்தனா்.

இப் பயிற்சி வகுப்பில், மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளா்கள் டி. மதியழகன் (தலைமையிடம்), எம். பாலமுருகன் (மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு), துணைக் கண்காணிப்பாளா்கள் எம்.எஸ்.எம். வளவன் (சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு), எம். தனசேகரன் (மங்களமேடு) மற்றும் காவல் ஆய்வாளா்கள், சாா்பு- ஆய்வாளா்கள் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com