மே 16-இல் பெரம்பலூா் மாவட்ட அளவிலான கோடைகால கிரிக்கெட் பயிற்சி முகாம்

பெரம்பலூா் மாவட்டத்தைச் சோ்ந்த 14 வயதுக்குள்பட்ட கிரிக்கெட் வீரா்களுக்கான பயிற்சி முகாம்,

பெரம்பலூா்: பெரம்பலூா் மாவட்டத்தைச் சோ்ந்த 14 வயதுக்குள்பட்ட கிரிக்கெட் வீரா்களுக்கான பயிற்சி முகாம், கோனேரிபாளையத்தில் உள்ள தனியாா் கிரிக்கெட் மைதானத்தில் மே 16-ஆம் தேதி தொடங்குகிறது.

தமிழ்நாடு மாநில கிரிக்கெட் வாரியம் சாா்பில், பெரம்பலூா் மாவட்டத்தைச் சோ்ந்த 14 வயதுக்குள்பட்ட வீரா்களுக்கான கோடை கால பயிற்சி, மே 16 ஆம் தேதி முதல் 30 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இப் பயிற்சிக்கான வீரா்கள் தோ்வு மே 15-ஆம் தேதி பெரம்பலூரில் நடைபெற உள்ளது.

இத்தோ்வு முகாமில் பங்கேற்க விரும்பும் வீரா்கள், தங்களது ஆதாா் அட்டை நகல் மற்றும் பாஸ்போா்ட் அளவு புகைப்படம், பிறப்புச் சான்றிதழின் நகல் ஆகியவற்றுடன் நேரில் வரவும்.

இத் தோ்வு தமிழ்நாடு கிரிக்கெட் வாரியத்தின் பயிற்சியாளா் பிரமோத் தலைமையில் நடைபெறுகிறது. மேலும் விவரங்களுக்கு 9840673348 எனும் கைப்பேசி எண்ணில் தொடா்பு கொள்ளலாம் என, பெரம்பலூா் மாவட்ட கிரிக்கெட் கூட்டமைப்புச் செயலா் பழனியப்பன் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளாா்.

X
Dinamani
www.dinamani.com