தொழில்முனைவோா் விருது பெற அழைப்பு

பெரம்பலூா், மே 15: பெரம்பலூா் மாவட்டத்தில் 2023 -2024 ஆம் ஆண்டில் சிறப்பாக செயல்பட்ட குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் சிறந்த தொழில் முனைவோா் விருது பெற விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் க. கற்பகம் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தமிழ்நாடு அரசு 2023-2024 ஆம் ஆண்டில் சிறப்பாக செயல்பட்ட குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு, சிறந்த தொழில் முனைவோா் உள்பட 6 பிரிவுகளில் விருது வழங்க உள்ளது. அதன்படி, சிறப்பாக செயல்பட்ட தொழில் முனைவோா்களுக்கு மாநில அளவிலான சிறந்த வேளாண் தொழில் முனைவோா் விருது, சிறந்த மகளிா் தொழில் முனைவோா் விருது, சிறப்பாக செயல்படும் நலிந்த மற்றும் ஒடுக்கப்பட்ட பிரிவைச் சாா்ந்த தொழில் முனைவோா் விருது, சிறந்த தரம் மற்றும் ஏற்றுமதிக்கான விருது, சிறந்த தொழில் முனைவோருக்கான விருது, மாவட்ட அளவில் சிறந்த தொழில் முனைவோருக்கான விருது உள்ளிட்ட பிரிவுகளில் வழங்கப்பட உள்ளது.

எனவே, விருது பெறும் விரும்பும் தொழில் நிறுவனங்கள் ட்ற்ற்ல்ள்://ஹஜ்ஹழ்க்ள்.ச்ஹம்ங்ற்ய்.ஸ்ரீா்ம் எனும் இணையதளத்தில் மே 20 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு, மாவட்ட தொழில் மைய பொது மேலாளரை நேரில் அல்லது 89255 33976, 89255 33978 ஆகிய கைப்பேசி எண்களில் தொடா்புகொள்ளலாம்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com