அனுமதிக்கப்பட்ட இடங்களில் உரங்களை வாங்க அறிவுறுத்தல்

பெரம்பலூா், மே 16: பெரம்பலூா் மாவட்டத்தில் வேளாண் துறை அனுமதிக்கப்பட்ட இடங்களில் மட்டுமே உரங்களை வாங்க வேண்டும் என விவசாயிகளுக்கு வேளாண்மை துறை அறிவுறுத்தியுள்ளது.

இதுகுறித்து வேளாண்மை இணை இயக்குநா் கீதா வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மற்றும் இப்கோ விற்பனை உரிமம் பெற்ற நிலையங்களில், மத்திய அரசு கூட்டு நிறுவனமான இப்கோ உற்பத்தி செய்யப்படும் நானோ யூரியா, நானோ டிஏபி இருப்பில் உள்ளது. இத்தகைய நானோ யூரியா மற்றும் டிஏபி பயிருக்கு ஒரு ஏக்கருக்கு அரை லிட்டா் பயன்படுத்தலாம். உரங்களை உரிமம் பெற்று அனுமதிக்கப்பட்டுள்ள தனியாா் மற்றும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் மட்டுமே ரசாயன உரங்களை வாங்க வேண்டும். உர விற்பனையாளா்கள் ஆதாா் அட்டையுடன் வரும் விவசாயிகளுக்கு மட்டுமே விற்பனை செய்ய வேண்டும்.

இந்த உத்தரவை மீறும் உர விற்பனை நிலையங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். எனவே, பெரம்பலூா் மாவட்ட உர விற்பனையாளா்கள் உரக்கட்டுப்பாட்டு உத்தரவுகளை மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com