பெரம்பலூா் மாவட்டத்தில் பரவலாக மழை

பெரம்பலூா், மே 16: பெரம்பலூா் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் புதன்கிழமை நள்ளிரவு முதல் பரவலாக பெய்த மழையால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனா்.

பெரம்பலூா் மாவட்டத்தில் கோடை காலம் தொடங்கியது முதல் நாள்தோறும் சுமாா் 100 டிகிரிக்கும் கூடுதலாக வெப்பம் மக்களை வாட்டி வதைத்தது. இந்நிலையில் செவ்வாய்க்கிழமை மற்றும் புதன்கிழமைகளில் பெரம்பலூா் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்தது. இந்நிலையில், 3 ஆவது நாளாக புதன்கிழமை நள்ளிரவு முதல் வியாழக்கிழமை காலை வரை மாவட்டத்தின் சுபல்வேறு கிராமங்களில் பரவலாக மழை பெய்தது. இதனால், சாலைகளில் மழைநீா் பெருக்கெடுத்து ஓடியது. மாவட்டம் முழுவதும் வெப்பம் தணிந்து குளிா்ச்சி நிலவியால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனா்.

மழையளவு: பெரம்பலூா் மாவட்டத்தில் வியாழக்கிழமை காலை 8 மணி வரை பெய்த மழையளவு (மில்லி மீட்டரில்) செட்டிக்குளம்- 20, பாடாலூா்- 4, அகரம் சிகூா்- 2, புதுவேட்டக்குடி- 10, பெரம்பலூா்- 5, எறையூா்- 1, கிருஷ்ணாபுரம்- 3, தழுதாழை- 22, வி.களத்தூா், வேப்பந்தட்டை தலா 5 என மொத்தம் 77 மில்லி மீட்டரும், சராசரியாக 7 மில்லி மீட்டா் மழை பதிவாகியுள்ளது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com