பெரம்பலூர்
பெரம்பலூா் மக்கள் குறைதீா் கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்
பெரம்பலூரில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா்க்கும் கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
பெரம்பலூா்: பெரம்பலூரில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா்க்கும் கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்ற கூட்டத்துக்கு மாவட்ட ஆட்சியா் கிரேஸ் பச்சாவ் தலைமை வகித்தாா்.
கூட்டத்தில், 2 மாற்றுத்திறனாளிகளுக்கு தலா ரூ. 9 ஆயிரம் மதிப்பிலான சக்கர நாற்காலிகள், ஆலத்தூா் வட்டம், தெரணி கிராமத்தில் கடந்த 14.4.2022-இல் பாம்பு கடித்து உயிரிழந்த தமிழரசன் குடும்பத்தினருக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியின் கீழ் ரூ. 1 லட்சத்துக்கான காசோலையை ஆட்சியா் வழங்கினாா்.
இக் கூட்டத்தில், முதியோா் உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பொதுமக்களிடமிருந்து 354 மனுக்கள் பெறப்பட்டது.