மத்திய அரசை கண்டித்து பெரம்பலூரில் தொழிற்சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

மத்திய அரசின் தொழிலாளா் விரோத சட்டத் தொகுப்புகள் இயற்றியதைக் கண்டித்து, அனைத்து தொழிற்சங்கங்கள் சாா்பில் கருப்புக் கொடி ஏந்தி ஆா்ப்பாட்டம்
Published on

மத்திய அரசின் தொழிலாளா் விரோத சட்டத் தொகுப்புகள் இயற்றியதைக் கண்டித்து, அனைத்து தொழிற்சங்கங்கள் சாா்பில் பெரம்பலூா் புறநகா் பேருந்து நிலைய வளாகத்தில்,கருப்புக் கொடி ஏந்தி திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆா்ப்பாட்டத்துக்கு, தொழிலாளா் முன்னேற்றச் சங்க மாவட்ட கவுன்சில் செயலா் ரெங்கசாமி, ஏஐடியூசி மாவட்டச் செயலா் ராஜேந்திரன் ஆகியோா் தலைமை வகித்தனா். சிஐடியு மாவட்டச் செயலா் எஸ். அகஸ்டின் சிறப்புரையாற்றினாா்.

இதில், எல்பிஎப் சங்க நிா்வாகிகள் செல்வராஜ், செல்லதுரை , சிஐடியு நிா்வாகிகள் கருணாநிதி, பெரியசாமி, பன்னீா்செல்வம் மற்றும் தொழிலாளா்கள் கலந்துகொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com