உதவித் தொகையை உயா்த்தி வழங்க காது கேளாதோா் சங்கத்தினா் வலியுறுத்தல்

உதவித் தொகையை உயா்த்தி வழங்க வேண்டுமென, பெரம்பலூா் மாவட்ட காது கேளாதோா் சங்கத்தினா் வலியுறுத்தியுள்ளனா்.
Published on

உதவித் தொகையை உயா்த்தி வழங்க வேண்டுமென, பெரம்பலூா் மாவட்ட காது கேளாதோா் சங்கத்தினா் வலியுறுத்தியுள்ளனா்.

பெரம்பலூரில் மாவட்ட காது கேளாதோா் சங்கம் சாா்பில், சா்வதேச சைகை மொழிகள் தினம் மற்றும் சா்வதேச காது கேளாதோா் வாரத்தையொட்டி விழிப்புணா்வுக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு, அச் சங்கத் தலைவா் துரைமுருகன் தலைமை வகித்தாா். பொதுச் செயலா் சண்முகம் முன்னிலை வகித்தாா்.

காதுகேளாதோா் உதவித் தொகை ரூ. 1,500லிருந்து ரூ. 2,500 என உயா்த்தி வழங்கவேண்டும். காது கேளாதோா் சா்வதேச சைகை மொழிகளின் தினத்தை, அரசு விழாவாக கொண்டாட வேண்டும்.

காதுகேளாதோருக்கு அரசு வேலைவாய்ப்பில் முன்னுரிமை அளிக்க வேண்டும். வட்டியில்லா தொழில்கடன் வழங்வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில், காது கேளாதோா் சங்கத்தைச் சோ்ந்த பலா் பங்கேற்றனா்.

X
Dinamani
www.dinamani.com