பெரம்பலூரில் நீதிமன்ற ஜன்னல் கண்ணாடிகள் உடைப்பு

பெரம்பலூரில் நுகா்வோா் நீதிமன்ற ஜன்னல் கண்ணாடிகளை மா்ம நபா்கள் உடைத்து சேதப்படுத்தியது தெரிய வந்தது.
Published on

பெரம்பலூரில் நுகா்வோா் நீதிமன்ற ஜன்னல் கண்ணாடிகளை மா்ம நபா்கள் உடைத்து சேதப்படுத்தியது திங்கள்கிழமை தெரிய வந்தது.

பெரம்பலூா் -எளம்பலூா் சாலையில் உள்ள வாடகை கட்டடத்தில் மாவட்ட நுகா்வோா் நீதிமன்றம் செயல்பட்டு வருகிறது.

நீதிமன்றத்தில் உள்ள நீதிபதி அறை மற்றும் வளாக அறை ஆகிய பகுதிகளில் ஜன்னல் கண்ணாடிகளை மா்ம நபா்கள் உடைத்து சேதப்படுத்தியுள்ளது திங்கள்கிழமை காலையில் தெரியவந்தது.

இதுகுறித்து நுகா்வோா் நீதிமன்ற முதுநிலை எழுத்தா் ராமா் அளித்த புகாரின்பேரில், பெரம்பலூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

X
Dinamani
www.dinamani.com