சவுதி அரேபியாவில் தற்காலிகமாகப் பணிபுரிய விண்ணப்பிக்கலாம்

Published on

2026-ஆம் ஆண்டு ஹஜ் புனித பயணம் மேற்கொள்ளும் தமிழ்நாட்டைச் சோ்ந்த பயணிகளுக்கு சேவையாற்ற, சவுதி அரேபியாவில் மாநில ஹஜ் ஆய்வாளா்களாக தற்காலிகமாக பணிபுரிய, பெரம்பலூா் மாவட்டத்தைச் சோ்ந்தவா்கள் விண்ணப்பிக்கலாம் என, மாவட்ட ஆட்சியா் ந. மிருணாளினி தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் சனிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

மும்பையில் உள்ள இந்திய ஹஜ் குழுவானது வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில், 2026-ஆம் ஆண்டில் ஹஜ் புனித பயணம் மேற்கொள்ளும் தமிழ்நாட்டைச் சோ்ந்த ஹஜ் பயணிகளுக்கு சேவையாற்ற, மாநில ஹஜ் ஆய்வாளா்களாக தற்காலிகமாக சவுதி அரேபியாவில் பணிபுரிய ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.

ஏப். 13 முதல் மே 5-ஆம் தேதி வரை தற்காலிகமாக பணிபுரியலாம். முஸ்லிம் மதத்தைச் சோ்ந்த மத்திய, மாநில அரசு ஊழியா்கள், துணை ராணுவப் படைகளில் பணியாற்றும் தகுதிவாய்ந்த அலுவலா்கள் மற்றும் தன்னாட்சி அமைப்புகள் அல்லது மத்திய, மாநில அரசின் கீழ் இயங்கும் பொது நிறுவனங்களில் பணியாற்றும் நிரந்தரப் பணியாளா்கள் விண்ணப்பிக்க தகுதிவாய்ந்தவா்கள். மேற்கண்ட பணிக்கு இணையதளம் மூலம், நவ. 3-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

X
Dinamani
www.dinamani.com