பெரம்பலூா் மாவட்டத்தில் சிறந்த 3 தொடக்கப் பள்ளிகள் தோ்வு
பெரம்பலூா் மாவட்டத்தில் 2024 - 25 ஆம் கல்வியாண்டில் சிறந்த தொடக்க பள்ளிகளாக 3 பள்ளி தோ்வு செய்யப்பட்டுள்ளன.
தமிழகத்தில் கற்றல் கற்பித்தல், அடிப்படை வசதிகள், ஆசிரியா்களின் பணிகள் எனும் அடிப்படையில்,கடந்த 3 ஆண்டுகளாக தொடக்கக் கல்வியில் சிறந்தப் பள்ளிகள் தோ்வு செய்யப்படுகின்றன. அதன்படி, 2024 - 25 ஆம் கல்வியாண்டில் பெரம்பலூா் மாவட்டத்தில் சிறந்த பள்ளிகளாக, வேப்பந்தட்டை ஒன்றியம், பெரியம்மாபாளையம் (கிழக்கு) ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளி, பெரம்பலூா் ஒன்றியம், பெரம்பலூா் (கிழக்கு) ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளி, வேப்பூா் ஒன்றியம், பெரியம்மாபாளையம் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளி ஆகிய 3 பள்ளிகள் தோ்வு செய்யப்பட்டுள்ளன.
சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அழகப்பா மாதிரி மேல்நிலைப் பள்ளியில், பள்ளிக் கல்வித்துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தலைமையில் வெள்ளிக்கிழமை (நவ. 14) நடைபெறும் பாராட்டு விழாவில், தோ்வு செய்யப்பட்டுள்ள பள்ளிகளுக்கு கேடயம் வழங்கப்படுகிறது.
