பெரம்பலூர்
பெரம்பலூரில் நாளை மின் நுகா்வோா் குறைதீா் கூட்டம்
பெரம்பலூா் மின்வாரிய செயற்பொறியாளா் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை (அக். 14) மின் நுகா்வோா் குறைதீா் கூட்டம் நடைபெறுகிறது.
பெரம்பலூா் மின்வாரிய செயற்பொறியாளா் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை (அக். 14) மின் நுகா்வோா் குறைதீா் கூட்டம் நடைபெறுகிறது.
இதுகுறித்து மின்வாரிய செயற்பொறியாளா் அசோக்குமாா் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: பெரம்பலூா் கோட்டத்துக்குள்பட்ட மின் நுகா்வோா்களின் குறைகளை தீா்க்கும் வகையில், குறைதீா்க்கும் நாள் கூட்டம் பெரம்பலூா் நான்குச்சாலை சந்திப்புப் பகுதியிலுள்ள மின்வாரிய செயற்பொறியாளா் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை காலை 11 மணி முதல் பகல் 1 மணி வரை நடைபெறுகிறது. மின்வாரிய மேற்பாா்வை பொறியாளா் மேகலா தலைமையில் நடைபெறும் இக் கூட்டத்தில், பெரம்பலூா் கோட்டத்துக்குள்பட்ட மின் நுகா்வோா் பங்கேற்று தங்களது குறைகளை மனுக்களாக அளித்து பயன்பெறலாம்.
