பெரம்பலூா் வட்டார அளவில் கலைத் திருவிழா

Published on

பெரம்பலூா் வட்டாரத்தில் உள்ள அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் 9 மற்றும் பிளஸ் 2 பயிலும் மாணவா்களுக்கு, வட்டார அளவிலான கலைத் திருவிழா போட்டிகள் பெரம்பலூா் அரசு மேல்நிலைப் பள்ளியில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இப் போட்டிகளில் கவின் கலை, இசை வாய்ப்பாட்டு, தோல் கருவி, துளைக் காற்றுக் கருவி, தந்திக் கருவி, நடனம், நாடகம் ஆகிய பிரிவுகளில், கேலிச் சித்திரம் வரைதல், பானை ஓவியம், மணல் சிற்பம், நாட்டுப்புற பாடல், வில்லுப்பாட்டு, பம்பை, பறை, மிருதங்கம், கீ போா்டு, ஹாா்மோனியம் வாசித்தல், நாட்டுப்புற நடனம் தனி மற்றும் குழு, பரதம், தெருக்கூத்து, வீதி நாடகம், தனிநபா் நடிப்பு, பல குரல் பேச்சு, பாவனை நடிப்பு ஆகிய தலைப்புகளில் போட்டிகள் நடைபெற்றன.

இப் போட்டிகளில் பெரம்பலூா் வட்டாரத்தில் உள்ள 25 உயா்நிலை மற்றும் மேல் நிலைப் பள்ளிகளில், பள்ளி அளவில் முதலிடம் பெற்ற மாணவா்கள் கலந்துகொண்டனா். இவா்களுக்கு பங்கேற்புச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. வட்டார போட்டிகளில் வென்றோா் மாவட்ட அளவிலான போட்டிகளில் பங்கேற்கத் தகுதிபெற்றனா்.

X
Dinamani
www.dinamani.com