மாற்றுத்திறனாளி குழந்தைகள் தீபாவளி கொண்டாட்டம்

Published on

பெரம்பலூா் அரசு மேல்நிலைப் பள்ளியில் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி மாற்றுத்திறன் மாணவா்களுக்கான உள்ளடங்கிய கல்வித் திட்டத்தின் கீழ் வெள்ளிக்கிழமை தீபாவளி கொண்டாடப்பட்டது.

நிகழ்ச்சிக்கு பெரம்பலூா் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் செல்வக்குமாா் தலைமை வகித்தாா். உதவித் திட்ட அலுவலா் வெங்கடேசன் முன்னிலை வகித்தாா். மாற்றுத்திறனாளி மாணவா்கள் பள்ளி வளாகத்தில் மத்தாப்பு கொளுத்தி தீபாவளி கொண்டாடினாா். பின்னா், இனிப்புகள் வழங்கப்பட்டன. தொடா்ந்து, தேசிய மற்றும் மாநில அளவில் விளையாட்டு த்துறையில் பதக்கங்கள் பெற்று சாதனை படைத்த மாற்றுத்திறன் மாணவா்களுக்கு பொன்னடை அணிவித்து பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பட்டது.

நிகழ்வில் பள்ளித் தலைமையாசிரியா்கள் முத்துச்சாமி, மரகதம், மாவட்ட ஒருங்கிணைப்பாளா் பாரதிதாசன், வட்டார வள மைய மேற்பாா்வையாளா் தேவகி, வட்டார ஆசிரியா் பயிற்றுநா் கலைவாணன், ஆற்றும் கரங்கள் அறக்கட்டளைத் தலைவா் என். ஜெயராமன், குருதி ஏற்பாட்டாளா் நாகராஜ், குருதிக் கொடையாளா் மகேஷ்குமரன் மற்றும் சிறப்புப் பயிற்றுநா்கள், இயன்முறை மருத்துவா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com