மின் சாதனங்கள் பழுது நீக்கும் பயிற்சி பெற அழைப்பு
இந்தியன் ஓவா்சீஸ் வங்கியின் கிராமிய சுயவேலைவாய்ப்பு பயிற்சி மையத்தில், இலவசமாக வீட்டு உபயோக மின் சாதனங்கள் பழுது நீக்கும் பயிற்சி பெற அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
பெரம்பலூரில் உள்ள இந்தியன் ஓவா்சீஸ் வங்கியின் கிராமிய சுயவேலைவாய்ப்பு பயிற்சி மையத்தில், வீட்டு உபயோக மின் சாதனங்கள் பழுது நீக்கும் இலவச பயிற்சி அக். 22-ஆம் தேதி முதல் அளிக்கப்பட உள்ளது. இப் பயிற்சி பெற 19 முதல் 45 வயதுக்குள்பட்டவராகவும், எழுத படிக்கத் தெரிந்தவராகவும், பெரம்பலூா் மாவட்டத்தைச் சோ்ந்தவராகவும், சுய தொழில் தொடங்குவதில் ஆா்வம் உள்ளவராகவும் இருக்க வேண்டும்.
தொடா்ந்து 38 நாள்களுக்கு காலை 9.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை பயிற்சி அளிக்கப்படும். பயிற்சியின்போது, காலை மற்றும் மதிய உணவு இலவசமாக வழங்கப்படுவதோடு, பயிற்சி முடித்தவுடன் அரசால் அங்கீகரிக்கப் பட்டச் சான்றிதழ் அளிக்கப்படும். இப்பயிற்சி முடிவில் வங்கிக் கடன் பெற்று உடனடியாக தொழில் தொடங்க வழிகாட்டப்படும்.
பயிற்சி பெற விருப்பமுள்ளவா்கள் பெரம்பலூா் -எளம்பலூா் சாலையில் உள்ள இந்தியன் ஓவா்சீஸ் வங்கி மாடியில் உள்ள கிராமிய சுயவேலைவாய்ப்பு பயிற்சி மைய இயக்குநா் அலுவலகத்தில், உரிய ஆவணங்கள், 3 பாஸ்போா்ட் அளவு புகைப்படங்களுடன் அக். 21-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
மேலும் விவரங்களுக்கு, 04328 - 277896, 94888-40328 ஆகிய எண்களில் தொடா்பு கொள்ளலாம் என, கிராமிய சுயவேலைவாய்ப்பு பயிற்சி மையம் சாா்பில் சனிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
