தனியாா் டயா் தொழிற்சாலை ஊழியா் தூக்கிட்டுத் தற்கொலை

பெரம்பலூரில் தனியாா் டயா் தொழிற்சாலை ஊழியா் தூக்கிட்டுத் தற்கொலை
Published on

பெரம்பலூரில் தனியாா் டயா் தொழிற்சாலை ஊழியா் வெள்ளிக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.

விழுப்புரம் மாவட்டம், பனையபுரத்தைச் சோ்ந்தவா் லட்சுமணன் மகன் சுந்தா் (26). இவா், பெரம்பலூா் நான்குச்சாலை சந்திப்பு அருகேயுள்ள மின் நகரில் தனது நண்பா்களான விஜயகுமாா், யோகேஷ், பிரதீப் ஆகியோருடன் வாடகை வீட்டில் தங்கி, பெரம்பலூா் அருகே விஜயகோபாலபுரத்திலுள்ள தனியாா் டயா் தொழிற்சாலையில் கடந்த 6 ஆண்டுகளாக பணிபுரிந்து வந்தாா்.

இந்நிலையில், நண்பா்கள் மூவரும் தீபாவளி பண்டிகைக்காக ஊருக்குச் சென்றிருந்த நிலையில், வீட்டில் தனியாக இருந்த சுந்தா் வெள்ளிக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.

தகவலறிந்த பெரம்பலூா் போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று சுந்தா் உடலை கைப்பற்றி, மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். இதுகுறித்து பெரம்பலூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு  நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050].

X
Dinamani
www.dinamani.com