கொப்​ப​னா​பட்டி ஜல்​லிக்​கட்​டுக்​குத் தடை கோரி மனு:​ புதுக்​கோட்டை ஆட்​சி​யர் பதி​ல​ளிக்க உத்​த​ரவு

மதுரை, ஜன.12: புதுக் கோட்டை மாவட் டத் தில் ஜல் லிக் கட்டு நடை பெ றும் இடங் கள் பட் டிய லில் குறிப் பி டப் பட் டுள்ள கொப் ப னா பட் டியை பட் டிய லில் இருந்து நீக் கக் கோரிய மனு வுக்கு, மாவட்ட ஆட் சி யர்

மதுரை, ஜன.12: புதுக் கோட்டை மாவட் டத் தில் ஜல் லிக் கட்டு நடை பெ றும் இடங் கள் பட் டிய லில் குறிப் பி டப் பட் டுள்ள கொப் ப னா பட் டியை பட் டிய லில் இருந்து நீக் கக் கோரிய மனு வுக்கு, மாவட்ட ஆட் சி யர் பதி ல ளிக்க உயர் நீதி மன்ற மது ரைக் கிளை செவ் வாய்க் கி ழமை உத் த ர விட் டது.

இது கு றித்து, பொன் ன ம ரா வதி தாலுகா, னா பட் டி யைச் சேர்ந்த எம்.கே.ராம நா தன் தாக் கல் செய்த மனு: ""கொப் ப னா பட்டி ஊராட்சி கடந்த 1970}ல் கொப்பானாபட்டி, கொன் னைப் பட்டி என இரண் டா கப் பிரிக் கப் பட் டது. இத னால், இரு கிரா மங் க ளுக் கும் இடையே குளங் க ளில் தண் ணீர் நிரப் பு வது முதல் பொது திரு வி ழாக் கள் வரை மோதல் போக்கு நில வி வ ரு கி றது.

மேலும், ஜல் லிக் கட் டுத் திரு விழா நடத் து வ தில் இரு ஊராட் சி க ளுக் கும் இடையே உரி மைப் பிரச்னை ஏற் பட் டுள் ளது. இது கு றித்து, 2009}ல் நடந்த மோத லில் துப் பாக் கிச் சூடும், ஆர்.டி.ஓ. விசா ர ணை யும், 21 பேர் மீதான குற்ற வழக் கும் இன் னும் நிலு வை யில் உள் ளது.

இந் நிலை யில், புதுக் கோட்டை மாவட் டத் தில் ஜல் லிக் கட்டு நடை பெ றும் இடங் கள் பட் டிய லில் கொன் னை யூர் மாரி யம் மன் கோயில் திரு வி ழா வை யொட்டி கொப் ப னா பட் டி யில் ஜல் லிக் கட்டு என 7.9.2009}ல் குறிப் பி டப் பட் டுள் ளது. இது ஏற் கெ னவே ஆர்.டி.ஓ. பிறப் பித்த தடை உத் த ர வுக்கு எதி ரா னது ஆகும்.

எனவே, ஜல் லிக் கட் டுக் குத் தடை விதித்து, பட் டிய லில் இருந்து பெயரை நீக்க உத் த ர விட வேண் டும் என மனு வில் குறிப் பிட் டுள் ளார்.

இந்த மனு நீதி ப தி கள் பி.முரு கே சன், ராஜ இ ளங்கோ ஆகி யோர் அடங் கிய டிவி ஷன் பெஞ்ச் முன் விசா ர ணைக்கு வந் தது. அப் போது, மனு வுக்கு புதுக் கோட்டை மாவட்ட ஆட் சி யர் பதி ல ளிக் கு மாறு டிவி ஷன் பெஞ்ச் உத் த ர விட் டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com