சுடச்சுட

  

  கரும்பு அறுவடைக்கு பின்னர், கரும்புத் தோகையை வயல்களில் எரிக்காமல், தூளாக்கி மூடாக்கு செய்வதால் மண்ணின் ஈரம் பாதுகாக்கப்படுவதோடு அடுத்த பயிருக்கு சிறந்த இயற்கை உரமாக அமைகிறது என்று வேளாண் இணை இயக்குநர் கே.எம். ஷாஜஹான் தெரிவித்துள்ளார்.

  தெட்சிணாபுரம் கிராமத்தில் கண்ணன் என்ற விவசாயியின் வயலில் கரும்புத் தோகையை மூடாக்கு செய்வது குறித்த செயல்விளக்கம் வியாழக்கிழமை நடைபெற்றது.

  இந்த நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து, கே.எம். ஷாஜஹான் பேசியது:

  கரும்பு அறுவடை முடிந்தவுடன், டிராக்டரில் இயங்கும் இயந்திரத்தின் உதவியுடன் கரும்பு தோகையினை தூளாக்கி வயல்களில் பரப்பினால் சிறந்த மூடாக்காக செயல்பட்டு, மண்ணில் உள்ள ஈரம் ஆவியாகாமல் தடுக்கப்படும்.

  மேலும், தூளாக்கப்பட்ட கரும்பு தோகை விரைவில் மக்கி இயற்கை உரமாக பயிருக்கும் கிடைக்கும். இயற்கை உரங்கள் அரிதாக உள்ள இந்த சூழ்நிலையில் இந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்தி விவசாயிகள் பயன்பெற வேண்டும்.

  தேசிய வேளாண்மை வளர்ச்சித் திட்டத்தின்கீழ் ஒரு ஏக்கருக்கு ரூ. 800 மானியமாக வழங்கப்படுகிறது என்றார்.

  நிகழ்ச்சியில் திருவரங்குளம் வேளாண் உதவி இயக்குநர் ராம. சிவகுமார், வம்பன் தேசிய பயறு வகை ஆராய்ச்சி நிலைய பேராசிரியர் பசுபதி, வேளாண்மை அலுவலர்கள் ஆர்.ஜெகதீஸ்வர், சு. அன்பரசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai