புதுக்கோட்டை அருகே திமுக பிரமுகர் வீட்டின் முன் தர்னா போராட்டத்தில் ஈடுபட்ட அவரது மனைவியிடம் போலீஸார் செவ்வாய்க்கிழமை விசாரணை மேற்கொண்டனர்.
புதுக்கோட்டையைச் சேர்ந்த திமுக பிரமுகர் சண்முகம். இவரது மனைவி ராதா. இவர்கள் இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக, பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். மேலும், இப்பிரச்னை தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வருகிறது.
இந்நிலையில், தனது நகைகளை மீட்டுத் தர வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, புதுகை அருகேயுள்ள கட்டியாவயலில் உள்ள கணவர் சண்முகம் வீட்டு வாசலில் செவ்வாய்க்கிழமை தரையில் அமர்ந்து திடீரென தர்னா போராட்டத்தில் ஈடுபட்டார் ராதா.
தகவலறிந்த திருக்கோகர்ணம் போலீஸார் அங்கு சென்று ராதாவை அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்.