மரங்களுக்கும் மனிதர்களுக்கும் இடையிலான உறவு முக்கியம்

மரங்களுக்கும் மனிதர்களுக்கும் இடையிலான உறவு முக்கியம் என்றார் வேப்பங்குடி மக்கள் விவசாய பண்ணை இயக்குநர் பி. மரியசெல்வம்.
Published on
Updated on
1 min read

மரங்களுக்கும் மனிதர்களுக்கும் இடையிலான உறவு முக்கியம் என்றார் வேப்பங்குடி மக்கள் விவசாய பண்ணை இயக்குநர் பி. மரியசெல்வம்.

கைக்குறிச்சி பாரதி மகளிர் கலை அறிவியல் கல்லூரியின் உயிர்தொழில் நுட்பவியல் மற்றும் நுண்ணுயிரியல் மாணவிகளுக்கு வேம்பங்குடி மக்கள் விவசாயப்பண்ணையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற காடுகள், மரங்கள் மற்றும் தாவரங்கள் பற்றிய  கள ஆய்வுக் கருத்தரங்கில் பங்கேற்று மேலும் அவர் பேசியது:

பூமியின் நிலப்பரப்பில் மூன்றில் ஒரு பகுதி காடுகளால் சூழப்பட்டுள்ளது அதிகமானோர்  தங்களது வாழ்வாதாரங்களுக்கு காடுகளைச் சார்ந்தே உள்ளனர். தண்ணீர், மழைப்பொழிவு, மண்வளம், மனிதர்களைப் போலவே உயிரினங்களின் வாழ்க்கைக்கு காடுகள் பயனுள்ளதாக இருக்கின்றன.   புயல், வெüóளத்தைக் கட்டுப்படுத்த காடு வளர்ப்பு அவசியம். மரங்களுக்கும் மனிதர்களுக்கும் இடையிலான உறவு மிகவும் முக்கியமானதாகும் மனிதனின் இறப்புக்கு மரங்கள் அத்தியாவசியம் என்பதைப் பலரும் உணருவதில்லை.   மனிதர்கள்  செய்யக்கூடிய மிகவும் மூர்க்கத்தனமான செயல்களில் ஒன்று மரங்களை அழித்து அதன் மூலம் பூமியை பாலைவனம் ஆக்குவதுதான். இங்குள்ள 300 வகை தாவரங்களில் அதிகமானவை நோய்களுக்கு பயன்படுகிறது. குறிப்பாக சொர்க்கமரம் என்றழைக்கப்படும் சைமரூபாகிளார்க்கா காசநோய்க்கு உதவுகிறது. மூங்கிலைப் பொறுத்தமட்டில் மண் அரிப்பைத் தடுக்கிறது. மனிதன் எவ்வளவுதான் கண்டுப்பிடிப்புகளை இயற்கை வளங்கள் தரும் அளவுக்கு ஈடாக இல்லை என்றார்.

கல்லூரித் தலைவர் குரு. தனசேகரன் தலைமை வகித்தார். கல்லூரி முதல்வர் ஜானகி சுவாமிநாதன், துறைத் தலைவர்கள் செ. விஜயசாமூண்டீஸ்வரி,சு. ரேணுகா, பேராசிரியர்கள் கி. சுபா, க. சுகுணா, பி. கிருஷ்ணவேணி, அஞ்சலிதேவி ஆகியோர் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com