சுடச்சுட

  

  புதுக்கோட்டை மாவட்டத்தில் வேளாண் பொறியியல் துறை மூலம்  ஊரக வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள், விவசாயிகளுக்கு விவசாயப்பணிகளில் இயந்திரமயமாக்கல் திட்டத்தின் பிப்.10 முதல் 15-ம் தேதி வரை ஒரு வாரகாலப்  பயிற்சி அளிக்கப்படுகிறது. 

  புன்செய் நில விவசாயத்திற்கான வேளாண்கருவிகள், நவீன வேளாண் கருவிகள் பராமரிப்பு, பழுது நீக்கம், நெல் சாகுபடி மற்றும் கரும்பு சாகுபடிக்குத் தேவையான வேளாண் கருவிகளின் தொகுப்பு ஆகிய தலைப்புகளில் பயிற்சிகள் வழங்கப்படுகின்றன.

  பிற துறை அலுவலர்கள் மூலமும் பயிற்சி வகுப்பு அளிக்கப்படும்.  மேலும்,  உள்ளூர் பட்டறிவுப் பயணமாகவும் அழைத்துச் செல்லப்படுவர்.  பயிற்சி முடித்த விவசாயிகளுக்கு துறையின் மூலம் சான்று வழங்கப்படும். புதுக்கோட்டை அலுவலகத்தில் 2 பயிற்சிகளும், அறந்தாங்கி அலுவலகத்தில் 2 பயிற்சிகளும் நடைபெற உள்ளன.  ஒரு பயிற்சிக்கு தலா 20 விவசாயிகள் (40 வயதுக்கு மிகாதவர்கள்) வீதம் 2 பயிற்சிகள் அளிக்கப்படும். பயிற்சியின்போது உதவித்தொகை வழங்கப்படும்.

  பயிற்சியில் கலந்து கொள்ள விரும்பும் விராலிமலை, அன்னவாசல், குன்றாண்டார்கோவில், புதுக்கோட்டை, திருவரங்குளம், கந்தர்வக்கோட்டை மற்றும் கறம்பக்குடி ஆகிய ஒன்றியப் பகுதிகளைச் சார்ந்த விவசாயிகள், புதுக்கோட்டை, திருச்சி சாலையில் நெடுஞ்சாலைத்துறை அலுவலகம் அருகே உள்ள உதவி செயற்பொறியாளர் அலுவலகத்திலும், பொன்னமராவதி, திருமயம், அரிமளம், அறந்தாங்கி, மணமேல்குடி, ஆவுடையார்கோவில் ஆகிய ஒன்றியப் பகுதிகளைச் சார்ந்த விவசாயிகள் அறந்தாங்கி அக்ரஹாரம் ரங்கோஐபாவா தெருவில் உள்ள உதவி செயற் பொறியாளர் அலுவலகத்திலும் பதிவு செய்யலாம்.

  மேலும் விவரங்களுக்கு புதுக்கோட்டை வருவாய் கோட்ட விவசாயிகள் 94434 56682 என்ற எண்ணிலும், அறந்தாங்கி வருவாய் கோட்ட விவசாயிகள் 94434 48667 என்ற எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai