Enable Javscript for better performance
அடிப்படை வசதிகளுக்கு முன்னுரிமை: திமுக வேட்பாளர் மு. அன்பழகன்- Dinamani

சுடச்சுட

    

    அடிப்படை வசதிகளுக்கு முன்னுரிமை: திமுக வேட்பாளர் மு. அன்பழகன்

    Published on : 27th March 2014 01:28 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    புதுக்கோட்டை தொகுதியில் குடிநீர், சாலை, சுகாதாரம் உள்ளிட்ட அடிப்படைப் பிரச்னைகளை தீர்க்க முன்னுரிமை அளிப்பேன் என்றார் திருச்சி மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளர் மு. அன்பழகன்.

    புதுக்கோட்டை ஒன்றியம் நத்தம்பண்ணை ஊராட்சியில்  மாவட்டச் செயலர் பெரியண்ணன்அரசு தலைமையில், முன்னாள் அமைச்சர் கே.என். நேரு முன்னிலையில்  புதன்கிழமை நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் வாக்குகள் கேட்டு அவர் மேலும் பேசியது:

    புதுக்கோட்டை மாவட்டத்தின் விவசாயத்தைக் காக்கும் வகையில் காவிரி குண்டாறு இணைப்புத் திட்டத்தை துரிதமாக நிறைவேற்ற முழு முயற்சி எடுப்பேன். மேலும், புதிய தொழிற்சாலைகள் அமைக்கப் பாடுவேன். அதிமுக அரசு சொன்னதைச் செய்யவில்லை. மக்கள் மனநிலை அதிமுக அரசுக்கு எதிராக உள்ளதால், நான் வெற்றி பெறுவது உறுதி என்றார்.

     இதைத்தொடர்ந்து, பாலன்நகர். வாகவாசல், முள்ளூர், இச்சடி, ஏ. மாத்தூர், மூக்கம்பட்டி, மேலவிடுதி, சம்பட்டிவிடுதி, மேலப்பட்டி, மணவிடுதி, மேட்டுப்பட்டி, ஆட்டாங்குடி, மறவப்பட்டி, அகரப்பட்டி,  பெருங்கொண்டான்விடுதி, வடவாளம் உள்பட 50 -க்கும் மேற்பட்ட கிராமங்களில் பிரசாரம் செய்து வாக்குச்சேகரித்தார்.

    இதில், நகரச் செயலர் அரு. வீரமணி, நிர்வாகிகள் க. நைனாமுகமது, த. சந்திரசேகர், முன்னாள் எம்எல்ஏ கவிதைப்பித்தன், ரெத்தினம், சுப. சரவணன், எம்.எம். பாலு, அப்புகாளை, மதியழகன், சாத்தையா, அசோக்பாண்டியன், செல்வராஜ், ரவி, சந்தோஷ்நாதன், ராஜேஸ்வரி, கமலாபண்டியன் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai