Enable Javscript for better performance
காளான் வளர்ப்பு இலவசப் பயிற்சி- Dinamani

சுடச்சுட

    

    புதுக்கோட்டை இந்தியன் ஓவர்சீஸ் வங்கி கிராமிய சுய வேலை வாய்ப்பு பயிற்சி நிலையத்தில் காளான் வளர்ப்பு குறித்த 6 நாள் இலவசப்பயிற்சியில் சேர கிராமப்புற இளைஞர்கள் ஏப். 14-க்குள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    இதுகுறித்து அப்பயிற்சி நிலைய இயக்குநர் சு. ரமேஷ் வெளியிட்ட தகவல்: புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள படித்த வேலை இல்லாத இளைஞர்களுக்கு   காளான் வளர்ப்பு குறித்த ஆறு நாள் இலவசப் பயிற்சியளிக்கப்படவுள்ளது. இப்பயிற்சி காலத்தில் மதிய உணவும்,வழங்கப்படும். இதில் சேர, 18 வயது முதல் 35 வயதுக்குள்பட்ட கிராமப்புறத்தைச் சேர்ந்த ஆண்கள், பெண்கள், 3 பாஸ்போர்ட் அளவு புகைப்படம், மதிப்பெண் , மாற்றுச் சான்றிதழ், வாக்காளர் அட்டை, குடும்ப அட்டை நகல்களையும் இணைத்து, கைப்பேசி எண்ணையும் குறிப்பிட்டு 14.4.2014-க்கு முன்பாக   நிலைய இயக்குநர், இந்தியன் ஓவர்சீஸ் வங்கி கிராமிய சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிலையம், 1506-02 மேல நான்காம் வீதி, ( திலகர்திடல் எதிரில்) புதுக்கோட்டை 622001 என்ற முகவரியில் நேரில் விண்ணப்பிக்கலாம்.    மேலும் விபரங்களுக்கு 04322-225 339, 99947 37185  ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai