Enable Javscript for better performance
சத்தியமங்கலம் கல்லூரியில் பயிலரங்கு- Dinamani

சுடச்சுட

    

    புதுக்கோட்டை மாவட்டம், சத்தியமங்கலத்தில் உள்ள சுதர்சன் பொறியியல் கல்லூரியில் சிவில் துறை சார்பில் அஸ்திவார்-14 எனும் தலைப்பில் பயிற்சி பயிலரங்கு அண்மையில் நடைபெற்றது.

    இதில் திருச்சி பொதுப்பணித் துறை மேற்பார்வைப் பொறியாளர் கே. மனுராஜ், காரைக்குடி அழகப்பசெட்டியார் பொறியியல் கல்லூரிப் பேராசிரியர் சிவநேசன் ஆகியோர் பங்கேற்று, சிவில் துறையில் தற்கால பயன்பாடுகள், வருங்காலங்களில் ஏற்படக்கூடிய மாற்றங்கள், அடுத்த 10 ஆண்டுகளுக்கு சிவில் துறை மாணவ, மாணவிகளுக்கு உள்ள அதிக வேலைவாய்ப்பு, மாணவர்கள் செய்முறைப் பயிற்சியில் செலுத்த வேண்டிய கவனம், திறமையான சிவில் துறை பொறியாளர்களின் எண்ணிக்கை தேவையைவிடக் குறைவாக இருப்பது, எனவே, மாணவர்கள் திறமையை வளர்த்துக் கொள்ள வேண்டியதன் அவசியம் குறித்து விளக்கினர்.

    ஆய்வுக கட்டுரைகளைச் சமர்பித்த மாணவர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. கல்லூரி முதல்வர் கே. கணசன் பயிற்சியைத் தொடக்கி வைத்தார்.

     

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai