Enable Javscript for better performance
தேர்தல் விழிப்புணர்வு பிரசார ஆலோசனைக் கூட்டம்- Dinamani

சுடச்சுட

    

    வாக்காளார்களுக்கு தேர்தலில் வாக்களிப்பது குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்துவது தொடர்பான ஆலோசனைக்கூட்டம்  மாவட்ட ஆட்சியரகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

    கூட்டத்துக்கு மாவட்ட வருவாய் அலுவலர் சு. மாரிமுத்து தலைமை வகித்தார்.

    இதில், பொது மக்கள் அதிகம் கூடும் இடங்களான பேருந்து நிலையம், சந்தைகள், வழிபாட்டுத் தலம், ரயில்நிலையம், மருத்துவமனைகள், வங்கிகள் மற்றும் திரையரங்குகளில் விளம்பரப் பதாகைகள் அமைக்கவும் அனைத்து வீடுகளிலும் விழிப்புணர்வு கையேடுகளை வழங்கவும் சுவரொட்டிகள், கலைக்குழுக்கள், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் மூலம் விழிப்புணர்வு பேரணி மற்றும் மனிதச் சங்கிலி, மாரத்தான், போக்குவரத்துத் துறையின் சார்பில்  பேருந்துகள் மற்றும் போக்குவரத்து சிக்னல்களில்

    விளம்பரப் பலகைகள் அமைத்தல், திரையரங்குகளில் விழிப்புணர்வு குறும்படங்கள் காண்பித்தல் ஆகிய நடவடிக்கைகள் மூலம் பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதென தீர்மானிக்கப்பட்டது.

     மேலும், செய்தி மக்கள் தொடர்பு துறை அலுவலகத்தின் மூலம்   தேர்தல் விழிப்புணர்வு குறும்படங்கள் விடியோ வாகனம் மூலம் பொதுஇடங்கள் மற்றும் உள்ளூர் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பப்படுகிறது.

    இவற்றை நகராட்சி, பேரூராட்சி மற்றும் ஊராட்சி ஒன்றியங்களுக்குட்பட்ட பகுதிகளில் திரையிட சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai