Enable Javscript for better performance
வாக்குச்சாவடிகளில் அடிப்படை வசதிகள்: மண்டல அலுவலர்கள் உறுதி செய்ய வேண்டும்- Dinamani

சுடச்சுட

    

    வாக்குச்சாவடிகளில் அடிப்படை வசதிகள்: மண்டல அலுவலர்கள் உறுதி செய்ய வேண்டும்

    Published on : 27th March 2014 01:31 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    வாக்குச்சாவடிகளில் அடிப்படை வசதிகள் உள்ளதா என்பதை வாக்குச்சாவடி மண்டல அலுவலர்கள் உறுதி செய்ய வேண்டும் என்றார் மாவட்ட ஆட்சியர் ஜெயஸ்ரீ முரளிதரன்.

    திருச்சி மாவட்ட ஆட்சியரகத்தில் புதன்கிழமை நடைபெற்ற புதுக்கோட்டை, கந்தர்வகோட்டை தொகுதிகளின் வாக்குச்சாவடி மண்டல அலுவலர்களுக்கான ஆய்வுக் கூட்டத்துக்குத் தலைமை வகித்து, அவர் மேலும் பேசியது:

    வாக்குச்சாவடி மண்டல அலுவலர்களின் கடமைகள் 3 வகைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. வாக்குச்சாவடிகளில் குடிநீர், கழிவறை, மின்சாரம் போன்ற அடிப்படை வசதிகளையும்,  வாக்காளர்களின் எண்ணிக்கை, மாற்றுத்திறனாளிகளுக்கான சாய்வுதளம் போன்ற வசதிகள் முழுமையாக உள்ளதா என்பதையும் மண்டல தேர்தல் அதிகாரிகள் உறுதி செய்து கொள்ள வேண்டும்.

    படிவம் 17 ஏ,17சி ஆகியவற்றை பூர்த்தி செய்யவும், அலைபேசியில் குறுந்தகவல் அனுப்பவும் அதிகாரிகள் தெரிந்து வைத்திருக்க வேண்டும். வாக்குப்பதிவுக்கு முதல்நாள்  உரிய வாக்குச்சாவடிக்குச் சென்று தேர்தலுக்குத் தேவையான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வந்து சேர்ந்துள்ளதா, வாக்குச்சாவடி அலுவலர்கள் தயார் நிலையில் உள்ளார்களா எனவும் சரிபார்க்க வேண்டும்.

    தயார் நிலையில் வாக்குச்சாவடி அலுவலர்கள் இல்லையெனில் உதவித் தேர்தல் அலுவலருக்குத் தகவல் தெரிவித்து, மாற்றுப்பணியாளரை ஏற்பாடு செய்ய வேண்டும்.

    தேர்தல் பணியில் ஈடுபடும் அரசு அலுவலர்கள் நம்பகத்தன்மையுடனும், வெளிப்படையாகவும்இருக்க வேண்டும் என்றார் ஆட்சியர்.

    மாவட்ட வருவாய் அலுவலர் க. தர்ப்பகராஜ், புதுக்கோட்டை கோட்டாட்சியர் ஆர். ராஜாராமன், ஆதிதிராவிடர் நல அலுவலர் என். ஜெயராஜ் உள்ளிட்டோர் கூட்டத்தில் பங்கேற்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai