Enable Javscript for better performance
ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்- Dinamani

சுடச்சுட

    

    ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

    By புதுக்கோட்டை  |   Published on : 17th April 2015 05:40 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    வட்டார வளமைய ஆசிரியர் பயிற்றுநர்களை பள்ளிகளில் பட்டதாரி ஆசிரியர்களாகப் பணிமாறுதல் செய்ய வலியுறுத்தி அனைத்து வட்டார வளமைய ஆசிரியர்கள் முன்னேற்ற சங்கத்தினர் வியாழக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    புதுக்கோட்டையில் கூடுதல் முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகம் எதிரில் மாவட்டத் தலைவர் பி. விஜயராகவன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், உயர்நீதிமன்ற மதுரை கிளையின் உத்தரவுப்படி 885 ஆசிரியர் பயிற்றுநர்களை பள்ளிகளுக்கு பட்டதாரி ஆசிரியர்களாக உடனடியாக பணிமாறுதல் செய்யவேண்டும். 2014-2015 -ம் கல்வியாண்டில் பள்ளிக்கு அனுப்ப வேண்டிய 500 பயிற்றுநர்களை உடனடியாக பணிமாறுதல் செய்யவேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. அமைப்புச் செயலர் கே. வேலுச்சாமி, மாவட்டச் செயலர் ஜி. சங்கர், மாவட்டப் பொருளாளர் கே. குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai