Enable Javscript for better performance
ஏப். 24-ல் சமையல்எரிவாயு நுகர்வோர் குறைகேட்பு முகாம்- Dinamani

சுடச்சுட

    

    ஏப். 24-ல் சமையல்எரிவாயு நுகர்வோர் குறைகேட்பு முகாம்

    By புதுக்கோட்டை  |   Published on : 17th April 2015 05:23 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    புதுக்கோட்டை மாவட்டத்தில் சமையல் எரிவாயு நுகர்வோர் குறைகேட்பு முகாம் வரும் 24-ம் தேதி நடைபெறவுள்ளது.

    இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் சு. கணேஷ் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

    புதுக்கோட்டை மாவட்டத்தில் சமையல் எரிவாயு நுகர்வோர் சிலிண்டர்களை பெறுவது, பதிவு செய்வது, காலதாமதம் போன்ற குறைபாடுகள் குறித்த புகார்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கவும், எண்ணெய் நிறுவனங்களின் விதிமுறைகளுக்கு உட்பட்டு சமையல் எரிவாயு உருளை விநியோகத்தை சீரமைக்கும் நோக்கிலும் குறை கேட்பு முகாம் நடைபெறவுள்ளது.

    புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில் பொதுமக்கள் குறைகேட்கும் கூட்ட அரங்கில் மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில் வரும் 24-ம் தேதி நண்பகல் 12 மணிக்கு இந்த முகாம் நடைபெற உள்ளது. எனவே, சமையல் எரிவாயு இணைப்பில் உள்ள குறைகளை நுகர்வோர் மனுக்கள் மூலம் இந்தக் கூட்டத்தில் தெரிவிக்கலாம்.

     

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai