Enable Javscript for better performance
காவிரி குண்டாறு இணைப்புத் திட்டத்தை வலியுறுத்தி விவசாயிகள் உண்ணாவிரதம்- Dinamani

சுடச்சுட

    

    காவிரி குண்டாறு இணைப்புத் திட்டத்தை வலியுறுத்தி விவசாயிகள் உண்ணாவிரதம்

    By புதுக்கோட்டை  |   Published on : 17th April 2015 05:40 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    காவிரி குண்டாறு இணைப்புத் திட்டத்தை விரைந்து நிறைவேற்ற வலியுறுத்தி, விவசாயிகள் சங்கங்கள் வியாழக்கிழமை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டன.

    காவிரி குண்டாறு இணைப்புத் திட்டத்தை விரைந்து நிறைவேற்ற வேண்டும். தென்னக நதிகளை இணைக்க வேண்டும். புதுக்கோட்டையை வறட்சி மாவட்டமாக அறிவிக்க வேண்டும். வேளாண் கடனை ரத்துசெய்ய வேண்டும். கருவேல மரங்களை அகற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.

    புதுக்கோட்டை திலகர் திடலில் காவிரி குண்டாறு இணைப்புத் திட்ட ஒருங்கிணைப்புக் குழு மாநிலத் தலைவர் மாரிமுத்து தலைமையில் நடைபெற்ற உண்ணாவிரதத்தை பொதுச்செயலரும், சிவகங்கை நகர்மன்றத் தலைவருமான அர்ச்சுணன் தொடக்கி வைத்தார். வழக்குரைஞர் சங்கத் தலைவர் ஏ. முருகேசன் உண்ணாவிரதத்தை முடித்து வைத்தார்.

    இதில், தென்னக நதிகள் இணைப்புச் சங்கம், அனைத்து விவசாயிகள் சங்கத்தினர் நூற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai