Enable Javscript for better performance
திருச்சி அதிமுக பிரமுகர் கொலை வழக்கு: புதுகை நீதிமன்றத்தில் ஒருவர் சரண்- Dinamani

சுடச்சுட

    

    திருச்சி அதிமுக பிரமுகர் கொலை வழக்கு: புதுகை நீதிமன்றத்தில் ஒருவர் சரண்

    By புதுக்கோட்டை  |   Published on : 17th April 2015 05:29 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திருச்சி திருவெறும்பூர் அருகே அதிமுக பிரமுகர் அண்மையில் கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடையதாகக் கருதப்படும் ஒருவர் புதுக்கோட்டை நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் வியாழக்கிழமை சரணடைந்தார்.

    திருச்சி திருவெறும்பூர் அருகே துவாக்குடி வடக்குமலை வ.உ.சி நகரைச் சேர்ந்த அதிமுக பிரமுகர் முனீஸ்வரன் (43). இவர் லாரி உரிமையாளர்கள் சங்கத்தில் நிர்வாகியாக இருந்து வந்தார். கடந்த 2-ம் தேதி முனீஸ்வரன் மோட்டார் சைக்கிளில் சென்ற போது மர்மக் கும்பலால் கொலை செய்யப்பட்டார்.

    இதுகுறித்து துவாக்குடி போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த கொலை வழக்கு தொடர்பாக 9 பேரை போலீஸார் கைதுசெய்தனர்.

    கைது செய்யப்பட்ட பிரகாஷின் தம்பி நாகலிங்கம் புதுக்கோட்டை நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் வியாழக்கிழமை சரணடைந்தார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai