Enable Javscript for better performance
புதுகையில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்- Dinamani

சுடச்சுட

    

    புதுக்கோட்டை நகரில் பல்வேறு பகுதிகளில் இருந்த ஆக்கிரமிப்புகளை அகற்றும் நடவடிக்கையில் நகராட்சி நிர்வாகம் வியாழக்கிழமை ஈடுபட்டது.

    புதுக்கோட்டை நகராட்சியின் பராமரிப்பில் உள்ள புதிய பேருந்து நிலையத்தில் நடைபாதையில் எவ்வித அனுமதியுமின்றி தன்னிச்சையாக ஆக்கிரமித்துள்ள கடைகளை அகற்ற நகராட்சி ஆணையர் (பொ) ஜெ. சுப்பிரமணியன் உத்தரவிட்டார்.

    இதையடுத்து, நகரமைப்பு அலுவலர் மாலதி தலைமையில், நகராட்சி அலுவலர்கள் நகர் முழுவதும் நடைபாதையில் ஆக்கிரமிக்கப்பட்டிருந்த கடைகளையும், தரைக் கடைகளையும் அற்றும் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

    இதில், புதுகை சாந்தநாதசுவாமிகோயில் சன்னதி வீதியில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன. வியாபாரிகள் சிலர் தாமாகவே அகற்றிக்கொள்ள காலஅவகாசம் கேட்டனர். தொடர்ந்து புதிய பேருந்து நிலைய நுழைவு வாயிலருகே ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த கடையும் அகற்றப்பட்டது.

    மேலும், வரத்து வாரிகள் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கும், அவற்றைத் தூர் வாருவதற்கும் நகராட்சி நிர்வாகம் துரித நடவடிக்கையில் ஈடுபடப்போவதாகவும் ஆணையர் (பொ) ஜெ. சுப்பிரமணியன் தெரிவித்தார்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai