Enable Javscript for better performance
பொன்னமராவதியில் மானிய விலையில் வேளாண் இடுபொருள்கள் விநியோகம்- Dinamani

சுடச்சுட

    

    பொன்னமராவதியில் மானிய விலையில் வேளாண் இடுபொருள்கள் விநியோகம்

    By பொன்னமராவதி,  |   Published on : 17th April 2015 05:25 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பொன்னமராவதி வட்டாரத்தில் விவசாயிகளுக்கு மானிய விலையில் வேளாண் இடுபொருள்கள் விநியோகிக்கப்படுவதாக வேளாண்மை உதவி இயக்குநர் சி. ஜெயபாலன் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து அவர் புதன்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

    நவீன வேளாண் தொழில்நுட்பங்களை விவசாயிகளுக்கு கொண்டு சேர்ப்பதற்காக வேளாண்மை துறை சார்பில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி, பொன்னமராவதி வட்டார விவசாயிகளிடம் சிறுதானிய பயிர்கள் சாகுபடியை ஊக்குவிப்பதற்காக செயல்விளக்க திடல்கள் அமைக்க விரும்பும் விவசாயிகளுக்கு வரகு, சாமை மற்றும் குதிரைவாலி விதைகளும், அதற்கான ரசாயன உரங்களும் மானிய விலையில் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

    மேலும், தேசிய உணவுப் பாதுகாப்பு குழுமம் மற்றும் தேசிய எண்ணெய்வித்து உற்பத்தி குழுமம் ஆகிய திட்டங்களின் மூலம் 50% மானிய விலையில் நெல் நுண்சத்து உரங்கள், நிலக்கடலை நுண்சத்து உரங்கள் மற்றும் பயறுவகை பயிர்களுக்கும், நிலக்கடலை பயிர்களுக்கும் இடவேண்டிய உயிர் உரங்களும் மானிய விலையில் விநியோகிக்கப்பட்டு

    வருகிறது.

    தேசிய உணவுப் பாதுகாப்பு குழுமம் மூலம் வேளாண் கருவிகளான கைத்தெளிப்பான் மற்றும் விசைத்தெளிப்பான் ஆகியவை மானிய விலையில் விநியோகம் செய்யப்பட்டு வருகின்றன.

    இதுதவிர, வம்பன் 4 உளுந்து விதைகள், சணப்பு விதைகள் மு-6 நிலக்கடலை விதைகள், பயிர்ப் பாதுகாப்பு மருந்துகள் உள்ளிட்டவை பொன்னமராவதி வேளாண்மை விரிவாக்க மையத்தில் தற்போது விநியோகம் செய்யப்பட்டு வருவதால், தேவையான இடுபொருள்களை வாங்கி விவசாயிகள் பயனடைய வேண்டும்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai