Enable Javscript for better performance
மக்கள் தொடர்பு முகாம்:ரூ. 15.14 லட்சம் நலத் திட்ட உதவிகள்- Dinamani

சுடச்சுட

    

    மக்கள் தொடர்பு முகாம்:ரூ. 15.14 லட்சம் நலத் திட்ட உதவிகள்

    By அறந்தாங்கி,  |   Published on : 17th April 2015 05:39 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையார்கோவில் வட்டம், கோபாலப்பட்டினம் கிராமத்தில் மக்கள் தொடர்பு முகாம் புதன்கிழமை நடைபெற்றது.

    முகாமுக்கு மாவட்ட ஆட்சியர் சு. கணேஷ் தலைமை வகித்து 679 பயனாளிகளுக்கு ரூ. 15.14 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கிப் பேசியது:

    இந்த முகாமில் வருவாய்த் துறை சார்பில் 338 பேருக்கு ரூ. 4 லட்சம் மதிப்பில் வீட்டுமனைப் பட்டா, 101 பேருக்கு ரூ. 1 லட்சம் முதியோர் உதவித்தொகைக்கான ஆணை, 11 பேருக்கு ரூ. 9 லட்சம் விபத்து நிவாரண உதவித்தொகை, 14 பேருக்கு வாக்காளர் நகல் அடையாள அட்டை, 31 பேருக்கு புதிய குடும்ப அட்டை, 18 பேருக்கு நகல் குடும்ப அட்டை, 41 பேருக்கு பட்டா மாறுதல் ஆணை, 50 பேருக்கு மருத்துவக் காப்பீட்டு அட்டை, வேளாண்மைத் துறையின் சார்பில் 2 பேருக்கு மானிய விலையில் ஆயில் எஞ்சின், இயந்திரம் மூலம் நெல் அறுவடை செய்த 8 பேருக்கு ரூ. 11 ஆயிரம் மானிய தொகைக்கான காசோலை, 65 விவசாயிகளுக்கு மண்மாதிரி ஆய்வு முடிவுகள் விவர ஆட்டை என மொத்தம் 679 பேருக்கு ரூ. 15,14,193 மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது என்றார் அவர்.

    முகாமில் அறந்தாங்கி சட்டப்பேரவை உறுப்பினர் மு. ராஜநாயகம், கோட்டாட்சியர் டி.ஆர்.டீ. சாந்தி, வட்டாட்சியர் ரவிச்சந்திரன், மாவட்ட ஊராட்சி உறுப்பினர் பாமா கருப்பையா, ஒன்றியக் குழு உறுப்பினாகள் மு. நரேந்திரஜோதி, முகமது இக்பால், ஊராட்சித் தலைவர் முகமது மீராசா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai