Enable Javscript for better performance
வீட்டின் பூட்டை உடைத்து10 பவுன் நகை, ரூ. 50 ஆயிரம் திருட்டு- Dinamani

சுடச்சுட

    

    வீட்டின் பூட்டை உடைத்து10 பவுன் நகை, ரூ. 50 ஆயிரம் திருட்டு

    By அறந்தாங்கி  |   Published on : 17th April 2015 05:24 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    அறந்தாங்கி அருகே சிலட்டூர் எரிச்சி சாலையைச் சேர்ந்தவர் தங்கராஜ். இவர் தற்போது வெளிநாட்டில் உள்ளார். இவரது மனைவி கவிதா 2 குழந்தைகளுடன் சிலட்டூரில் வசித்து வருகிறார். இவர், புதுக்கோட்டையில் உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்ட உறவினரை பார்க்க குழந்தைகளுடன் வியாழக்கிழமை காலை வீட்டை பூட்டிவிட்டுச் சென்றுள்ளார். மாலையில் வந்து பார்த்தபோது, பின்புறக் கதவில் உள்ள பூட்டை உடைத்து உள்ளே நுழைந்த மர்ம நபர்கள், பீரோவில் இருந்த 10 பவுன் தங்க நகைகள், ரூ. 50 ஆயிரம் ரொக்கம், சமையல் எரிவாயு உருளை ஆகியவற்றை திருடிச் சென்றது தெரியவந்தது. அறந்தாங்கி போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai