Enable Javscript for better performance
வேந்தன்பட்டியில் கால்நடை மருத்துவ முகாம்- Dinamani

சுடச்சுட

    

    வேந்தன்பட்டியில் கால்நடை மருத்துவ முகாம்

    By பொன்னமராவதி,  |   Published on : 17th April 2015 05:39 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பொன்னமராவதி அருகே உள்ள வேந்தன்பட்டியில் கால்நடைகளுக்கான செயற்கைமுறை கருவூட்டல், மலட்டு தன்மை நீக்க முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.

    வேளாண்மைத் துறை, அட்மா திட்டம், கால்நடை பராமரிப்பு துறை ஆகியன இணைந்து நடத்திய முகாமுக்கு பொன்னமராவதி வேளாண்மை உதவி இயக்குநர் சி. ஜெயபாலன் தலைமைவகித்தார். ஊராட்சித் தலைவர் சி. விஜயகுமார் முன்னிலை வகித்தார். பொன்னமராவதி கால்நடை மருத்துவர் ஜெ. நவநீதகிருஷ்ணன் வரவேற்றார்.

    அட்மா திட்ட ஆலோசனைக் குழு தலைவர் காசி கண்ணப்பன் முகாமை தொடக்கிவைத்து, விவசாயிகள் மற்றும் கால்நடை வளர்ப்போருக்கு தாது உப்பு கலவை மற்றும் கோ 4 தீவன புல் கரணைகளை இலவசமாக வழங்கினார்.

    முகாமில், வேந்தன்பட்டி, இடையபட்டி, வார்ப்பட்டு, மேலைச்சிவபுரி ஆகிய கிராமங்களைச் சேர்ந்த கால்நடைகளுக்கு செயற்கைமுறை கருவூட்டல், மலடுநீக்கம், குடற்புழு நீக்கம் ஆகிய சிகிச்சைகளை கால்நடை மருத்துவர்கள் ஜெ. நவநீதகிருஷ்ணன், சண்முகநாதன் மற்றும் முதுநிலை கால்நடை மேற்பார்வையாளர் கருப்பையா ஆகியோர் அளித்தனர்.

    இதுபோன்ற முகாம்கள் தொடர்ந்து ஏப். 21, 23, 28 ஆகிய தேதிகளில் முறையே பி.உசிலம்பட்டி, அஞ்சுபுளிப்பட்டி, குமாரபட்டி ஆகிய இடங்களில் நடைபெற உள்ளது. முகாமுக்கான ஏற்பாடுகளை அட்மா திட்ட தொழில்நுட்ப மேலாளர்கள் தேவி, ராஜு ஆகியோர் செய்திருந்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai