Enable Javscript for better performance
10-ம் வகுப்பு மாணவிபலாத்காரம்: இளைஞர் கைது- Dinamani

சுடச்சுட

    

    புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி அருகே 10-ம் வகுப்பு மாணவியை பலாத்காரம் செய்த இளைஞரை அறந்தாங்கி காவல் துறையினர் புதன்கிழமை கைது செய்தனர்.

    அறந்தாங்கி அருகே குரும்பூர் ஒத்தகடை வடிவேல் நகரைச் சேர்ந்தவர் மாரியப்பன் மகன் சரத்குமார் (20). இவர், அதே பகுதியைச் சேர்ந்த 15 வயது சிறுமி (10-ம் வகுப்பு மாணவி) புதன்கிழமை இரவு வீட்டருகே உள்ள காட்டுப் பகுதிக்குச் சென்ற போது, பலாத்காரம் செய்துவிட்டு ஓடிவிட்டாராம்.

    இதுகுறித்து அந்த சிறுமி வீட்டில் கூறியதையடுத்து, சிறுமியின் உறவினர்கள் அறந்தாங்கி மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதன்பேரில், போலீஸார் வழக்குப் பதிவு செய்து சரத்குமாரை கைது செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai