Enable Javscript for better performance
496 ஊராட்சிகளில் சிறப்பு கிராமசபைக் கூட்டம்- Dinamani

சுடச்சுட

    

    496 ஊராட்சிகளில் சிறப்பு கிராமசபைக் கூட்டம்

    By புதுக்கோட்டை  |   Published on : 27th January 2015 02:52 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    புதுக்கோட்டை மாவட்டத்தில் 66-வது குடியரசு தின விழாவை முன்னிட்டு, ஸ்ரீரங்கம் சட்டப்பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட விராலிமலை ஊராட்சி ஒன்றியம், கோமங்களம் கிராம ஊராட்சியைத் தவிர எஞ்சியுள்ள 496 ஊராட்சிகளிலும் திங்கள்கிழமை (ஜன. 26) சிறப்பு கிராமசபைக் கூட்டம் நடைபெற்றது.

    அன்னவாசல் ஒன்றியம், கோதண்டராமபுரம் கிராமம், குமரமலை முருகன் கோயில், கந்தர்வகோட்டை ஒன்றியம், தச்சங்குறிச்சி ஊராட்சி, தச்சங்குறிச்சி ஆகிய கிராமங்களில் நடைபெற்ற சிறப்பு கிராமசபைக் கூட்டங்களில் மாவட்ட ஆட்சியர் சு. கணேஷ் பார்வையாளராகப் பங்கேற்றார்.

    கிராமசபைக் கூட்டத்தில் அக்டோபர் 2014 முதல் டிசம்பர் 2014 முடிய கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொதுநிதி செலவினம், திட்ட அறிக்கை, குடிநீர் விநியோகம், ஊரக கட்டடங்கள் பராமரிப்பு மற்றும் புனரமைப்பு திட்டம் 2015-16, கொசுக்கள் மூலம் பரவும் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள், கிராமப்புறங்களில் உள்ள சீமைக்கருவேல மரங்களை அகற்றும் நடவடிக்கை, சுகாதாரம், இந்திரா நினைவு குடியிருப்புத் திட்டம் 2015-16, தாய் திட்டம் 2015-16, முதலமைச்சரின் சூரிய மின்சக்தியுடன் கூடிய பசுமை வீடுகள் திட்டம் 2015-16, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம், ஊராட்சிப் பகுதிகளில் நடைபெற்று வரும் பல்வேறு திட்டப் பணிகள் முன்னேற்றம் மற்றும் நிதி செலவின விவரங்கள்,

    மகளிர் திட்டம், புதுவாழ்வுத் திட்டம், பாரத பிரதம மந்திரி கிராம சாலை திட்டம், ஊரகப் பகுதிகளில் நிறுவப்பட்டுள்ள சூரிய சக்தி தெருவிளக்குகளை முறையாக பராமரித்தல் மற்றும் பாதுகாத்தல், கர்ப்பிணி தாய்மார்கள் 108 இலவச ஊர்தி சேவையை பயன்படுத்துதல் உள்ளிட்ட பொருள்கள் குறித்தும் விவாதிக்கப்பட்டது.

    இதையடுத்து, குமரமலை முருகன் கோயில், புதுக்கோட்டை திருவள்ளுவர் நகர் அரசு ஆதிதிராவிடர் நலக் கல்லூரி மாணவர் விடுதி, பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் நல அரசுக் கல்லூரி மாணவர் விடுதி ஆகிய இடங்களில் மரக்கன்றுகளை ஆட்சியர் நட்டு வைத்தார்.

    முன்னதாக, மாவட்ட ஆட்சியர் முன்னிலையில் வாக்காளர் தினம், 108 ஊர்தி சேவையை பொதுமக்கள் பயன்படுத்துவது தொடர்பான உறுதி எடுத்துக்கொண்டனர்.

    இதில் மாவட்ட வருவாய் அலுவலர் மாரிமுத்து, திட்ட இயக்குநர் (மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை) இரா. சந்தோஷ்குமார், இணை இயக்குநர் (வேளாண்) கே.எம். ஷாஜஹான், புதுவாழ்வுத் திட்ட அலுவலர் எஸ். வசுமதி, ஊராட்சித் தலைவர்கள் பிரான்சிஸ் (தச்சங்குறிச்சி), செல்வராஜ் (கோதண்டராமபுரம்), அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai