Enable Javscript for better performance
8-ம் வகுப்புமாணவர்களுக்கு அடைவு நிலைத் தேர்வு- Dinamani

சுடச்சுட

    

    8-ம் வகுப்புமாணவர்களுக்கு அடைவு நிலைத் தேர்வு

    By விராலிமலை  |   Published on : 27th January 2015 02:52 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    இலுப்பூர் அருகேயுள்ள ராப்பூசல் அரசு மேல்நிலைப் பள்ளி 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு, அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் சார்பில் அடைவு நிலைத்தேர்வு சனி, ஞாயிறு ஆகிய 2 நாள்கள் நடைபெற்றது.

    இதில் 8-ம் வகுப்பில் 30 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டனர். தொடர்ந்து முதல் நாள் தமிழ், கணக்குப் பாடத்துக்கும், இரண்டாம் நாள் ஆங்கிலம், அறிவியல் பாடத்துக்கும் அடைவு நிலைத்தேர்வு நடத்தப்பட்டது. தேர்வை விராலிமலை வட்டார வளமைய ஆசிரிய பயிற்றுநர் மீனாட்சி நடத்தினார்.

    மாணவர்கள் அடைவுத்தேர்வு எழுதியதை அன்னவாசல் வட்டார வளமைய மேற்பார்வையாளர் கோவிந்தராசு, அன்னவாசல் கூடுதல் உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் கருணாகரன் உள்ளிட்டோர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். ஏற்பாடுகளை தலைமையாசிரியர் ஜெயராஜ் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai